பாகிஸ்தானுக்கான தக்காளி ஏற்றுமதியை நிறுத்தினர் மத்திய பிரதேச விவசாயிகள்!
Tuesday, February 19th, 2019
புல்வாமா தாக்குதலைக் கண்டித்து மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
மேலும் மத்தியபிரதேசத்தில் விளையும் தக்காளிக்கு பாகிஸ்தானில் வரவேற்பு இருந்ததனால் விவசாயிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.
காஷ்மீரில் புல்வாமாவில் மத்தியப்படை வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து மத்தியபிரதேச மாநிலம் ஜபுவா மாவட்டம் பெத்லவாட் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதியை நிறுத்திக் கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
ட்ரம்ப் அதிரடி: கணவன் மற்றும் மனைவி வேலை செய்யும் சலுகை நிறுத்தப்பட்டது!
திறக்கப்பட்டது எகிப்தின் ரஃபா எல்லை - பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு லொரிகளில் சென்றடைந்தது நிவாரணப் ...
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் இலங்கை உள்ளிட்ட ...
|
|
|


