பாகிஸ்தானில் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு – மின்வெட்டும் 12 மணி நேரமாக உயர்வு!

Tuesday, May 31st, 2022

எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து மின்சாரக் கட்டணத்தை ஏழு ரூபாவால் உயர்த்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் மக்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களுக்கு இணங்க இந்த விலை உயர்வுகள் உள்ளன.

பாகிஸ்தான் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையை 30 ரூபாவால் உயர்த்தியது.

ஏழைகளின் துயரைப் போக்க 14 மில்லியன் குடும்பங்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை அந்நாட்டரசு வழங்கியது.

இதேவேளை பாகிஸ்தானிலும் கடும் மின் நெருக்கடி நிலவுகிறது. அந்தவகையில் தற்போது அங்கு 12 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: