கொரோனா தொற்றாளர்களை இணங்காண மோப்ப நாய்கள் – பிரித்தானியா முயற்சி!

Monday, May 18th, 2020

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் இணங்கண்டு கொள்வதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவர்கள் பலருக்கு பரப்பி விடுகிற அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. அவர்களுக்கும் சில நேரங்களில் நோய் முற்றிவிடுகிற பரிதாபங்களும் நேர்கின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு, அதிலும் அவர்களுக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதற்கான வெளி அடையாளங்கள் தெரிவதற்கு முன்பே கண்டுபிடிப்பதற்கு, மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஆக, கொள்ளையர்களை, கொலைகாரர்களை, திருடர்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க பழகிய மோப்ப நாய்கள், இனி கொரோனா வைரஸ் பாதித்தவர்களையும் அடையாளம் கண்டு சொல்லும் நாட்கள் தொலைவில் இல்லை.

இதற்கான சோதனையை லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மருத்துவ கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் நடத்துகின்றனர்.

Related posts: