பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் – 10 பேர் உயிரிழப்பு!.

பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபர்-பக்துன்க்வா மாகாணம், டிராபன் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தின் மீதே இன்று அதிகாலை 3 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடத்தியும், பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் விமானங்களை இடைநிறுத்தியது குவைத்!
வாழ்க்கை செலவு குழு நாளை கூடுகின்றது - பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் வெளியாக...
நாட்டில் தனியார் கைகளில் 35,000 துப்பாக்கிகள் - பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவிப்பு!
|
|