எகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி!

Thursday, September 22nd, 2016

.

எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது.

படகில் சுமார் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில் பயணம் செய்த பெரும்பாலனாவர்கள் எகிப்தியர்கள், ஆனால் மற்றவர்கள் கிழக்கு ஆஃப்ரிக்கா மற்றும் ஹார்ன் ஆஃப் ஆஃப்ரிக்கா எனப்படும் ஜிபூட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை சேர்ந்தவர்கள்.மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து 42 உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும், 160 பேரை மீட்டுள்ளதாகவும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர் காக்கும் மிதவை யாருக்கு வேண்டுமோ அவர்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டியிருந்ததாக என்று பிபிசியிடம் மீடக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.எகிப்திலிருந்து அதிகளவில் வெளியேறும் குடியேறிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை நிறுவனமான ஃப்ரான்டெக்ஸ் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

_91335635_7fc5f9f1-0670-4026-a51b-f1de225d0d89

Related posts: