பாகிஸ்தானின் புதிய பிரதமரா நவாஸ் ஷெரீப்பின் சகோதரர்!

பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், பஞ்சாப் மாகாணத்தின் முதல்வருமான ஷெபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
பனாமா ஊழல் வழக்கில் சொத்து குவித்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஷெபாஸ் ஷெரீப் தேசிய சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கும் வரை 45 நாள் பிரதமர் வெற்றிடத்தை யார் நிரப்புவார் என கேள்வி எழுந்துள்ளது.
அதேசமயம், ஷெபாஸ் ஷெரீப் தேசிய சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லை எனில், அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என கூறப்படுகிறது. மேலும், கவாஜா ஆசிப் இடைக்கால பிரதமராக பதவியில் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related posts:
வர்த்தக போரில் எவரும் வெல்ல முடியாது : சீனா அதிபர் !
தொலைக்காட்சி அலைவரிசையான ஜெயா டிவிக்கு மூடு விழா!
ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பிடியாணைபிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!
|
|