பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் ஹனிஃப் முகமது மரணம்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நீண்ட இன்னிங்ஸை விளையாடிய வீரரும், பாகிஸ்தானின் முன்னாள் பேட்ஸ்மேனுமான ஹனிஃப் முகமது கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனது 81ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
1958 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுனில் நடந்த போட்டியில், ஹனிஃப் முகமது 16 மணி நேரங்கள் விளையாடி 337 ரன்களை குவித்தார். ஆசிய பேட்ஸ்மேன் ஒருவர் துணை கண்டத்திற்கு வெளியே பெற்ற அதிகபட்ச ரன்னாக இன்றுவரை இருக்கிறது.
இந்தியாவில் பிறந்த ஹனிஃப் முகமது, குழந்தை பருவத்தின் போதே கராச்சிக்கு சென்றுவிட்டார். 1952 இல், தன்னுடைய 17 வயதில், தான் பிறந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக களமிறங்கினார்.
Related posts:
ட்ரம்பின் மசோதா வாபஸ் பெறப்பட்டது!
அண்ணனின் கையெழுத்தால் மாறிய தங்கையின் தலையெழுத்து!
அரசுடன் நாம் இணக்க அரசியலை மேற்கொண்டிருந்தாலும் அந்தந்த வேளைகளில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியும் ...
|
|