பள்ளிகள் எரிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் – மனித உரிமை அமைப்பு!

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பள்ளிகள் கொழுத்தப்படுவது நிறுதப்பட வேண்டும் என்று “ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்” என்ற மனித உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்தில் இம்மாதிரி பள்ளிகள் எரிக்கப்பட்ட எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதையடுத்து இந்த கோரிக்கை வந்துள்ளது.ஜூலை மாதத் தொடக்கத்தில், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து அங்கு பள்ளிகள் நடைபெறவில்லை.
பள்ளிகள் எரிக்கப்படும் சம்பவத்திற்கு இது வரை யாரும் பொறுப்பேற்கவில்லை; அது குறித்து யாரும் கைதாகவும் இல்லை.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துவது, பள்ளிகளில் ராணுவ ஆக்கிரமிப்பு, பிரிவினைவாத போராளிகளாக குழந்தைகளை மாற்றுவது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்றும் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
Related posts:
ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பா விரையும் கனடா பிரதமர்!
போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை உடனடியாக தரையிறக்க சீன அரசு உத்தரவு!
ஒமான் அரசர் காலமானர்!
|
|