பல்கேரியப் பிரதமர் இராஜினாமா!
Wednesday, November 16th, 2016
தாம் பரிந்துரை செய்த ஜனாதிபதி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து பல்கேரியாவின் பிரதமர் போய்கோ பொரிசோவ் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பல்கேரியா ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் விமானப்படைத் தளபதி ருமன் ரடேவ் வெற்றியீட்டியுள்ளார். பல்கேரியா சோவியத் ஒன்றியத்தின் ஓர் நாடாக முன்னர் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் பதிவியை ராஜினாமாச் செய்த காரணத்தால் பல்கேரியாவில் காபந்து அரசு ஒன்று நிறுவப்படும் என்றும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக மக்கள் தற்போதைய அரசு மீது அதிருப்தியுடன் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
முடிசூட்டிக்கொள்ள அவகாசம் கேட்டு ஆச்சரியமூட்டியுள்ள தாய்லாந்து பட்டத்து இளவரசர்!
மல்யுத்த வீரர் கேன் நகர மேயரானார்!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு - ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளதாக த...
|
|
|


