பலூஜா நகரில் மனிதப் பேரழிவு – ஈராக் உதவிப்பணியாளர்கள் எச்சரிக்கை!
Monday, June 20th, 2016
பலூஜா நகரிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறி வருவதால், அங்கு பெரிய அளவிலான மனிதப் பேரழிவு அரங்கேறிக்கொண்டிருப்பதாக இராக்கில் உள்ள உதவிப்பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக, ஐ.எஸ் போராளிகளை விரட்டியடிப்பதற்கான முயற்சியில் அரசப்படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், சுமார் முப்பதாயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதிகப்படியான மக்களுக்கு நீர், உணவு மற்றும் மருந்துகள் வழங்க தாங்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திறந்த வெளியில், மிகுந்த நெருக்கடியான முகாம்களில் மக்கள் தூங்குகிறார்கள். சர்வதேச குழு மற்றும் ஈராக் அரசு ஆகிய இரண்டுமே இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண வேகமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்தியப் பிரமரை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் பிரதமர்!
சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்!
தாய்வானில் மீண்டும் சக்திவாய்ந்த நில அதிர்வு !
|
|
|


