பலுச்சிஸ்தான் மருத்துவமனையில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி!

பாகிஸ்தானின் தென் கிழக்கு பகுதியில் இருக்கும் பலுச்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமான குவெட்டாவில் மருத்துவமனை ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் வழக்கறிஞர்கள் என்றும், ஏற்கனவே கொல்லப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஒருவரது உடலை மருத்துவமனைக்கு உள்ளே எடுத்து செல்ல வந்த சட்டத்தரணிகள் என்றும் மாகாணத்தின் உள்துறை அமைச்சர் அக்பர் ஹரிஃபல் தெரிவித்துள்ளார்.
வெடி குண்டு தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
Related posts:
வேகக் கட்டுப்பாட்டை இழந்த புகையிரதம் விபத்து !
கனடா எல்லை பகுதிகள் சேவை அதிகாரி மீது எல்லை தாண்டிய கடத்தல் குற்றச்சாட்டு!
தலிபான் போராளிகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல்!
|
|