எவரெஸ்ட் ஏறமுயன்ற இந்தியர் உட்பட இருவர் மரணம: இருவரைக் காணவில்லை!

Monday, May 23rd, 2016

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மலை ஏறுபவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது கடந்த சில நாட்களில் அங்கு நிகழ்ந்த இரண்டாவது மரணமாகும்.

கடந்த சனிக்கிழமை அன்று மரியா ஸ்ட்ரிடோம் மலை உச்சியிலிருந்து கீழே திரும்பிக் கொண்டிருந்தபோது, ரத்தத்தில் பிராணவாயு அளவு குறைந்ததால் உயிரிழந்தார்.

இதற்குமுன், ஹாலந்து நாட்டை சேர்ந்த மலை ஏறுபவரான எரிக் ஆரி அர்னால்ட் உயிரிழந்தார்.

சுபாஷ் பால் என்ற இந்தியர் ஒருவர் கடந்த திங்களன்று உயிரிழந்தார். ஷெர்பா வழிகாட்டிகள் அவரை மலையிலிருந்து கீழே கொண்டுவர உதவிக்கொண்டிருந்த போதே அவர் உயிர் பிரிந்தது. இச்சூழலில், அங்கு மேலும் இரு இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக சொல்லப்படுகிறது.

பரீஷ்நாத் மற்றும் கவுதம் கோஷ் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது..

கடந்த ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் 18 பேர் உயிரிழந்தார்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டாண்டுகள் கழித்து தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் முதல் மலை ஏறும் பருவம் தொடங்கியுள்ளது.எவரெஸ்ட் சிகரத்தில் நிலவும் நல்ல பருவ நிலை மலை ஏறுபவர்களுக்கு ஏதுவாக இருப்பதால் கடந்த மே 11 ஆம் தேதியில் இருந்து இதுவரை 400 பேர் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர்.

ஆனால், இந்த வார இறுதியில் ஏற்பட்ட இறப்புகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள், உலகின் மிக உயரமான சிகரத்தின் ஆபத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

Related posts: