‘பர்தா’ அணிவதற்குத் தடை – மீறினால் தண்டனை!

டென்மார்கின் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகள் அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
முகத்தை மறைக்க தடை குறித்த சட்ட வரைபை நேற்று(31) அந்நாட்டு அரசு, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
குறித்த தடைச் சட்டத்துக்கு 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
இந்த சட்ட வரைபு வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பொது இடங்களில் எவரேனும் முகத்தை திரையிட்டு மறைத்திருந்தாலோ அல்லது முகத்தை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தாலோஅவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொலம்பியாவில் பாலம் இடிந்த விபத்தில் 9 பேர் பலி பலர் படுகாயம்!
கைகுலுக்க மறுப்பு: இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு!
600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்
|
|