பயங்கரவாத அச்சுறுத்தலால் தாய்லாந்தில் 3 மாகாணங்களில் புகையிரத சேவை இடை நிறுத்தம்!
Monday, September 5th, 2016
தாய்லாந்தின் தெற்கில் உள்ள மூன்று மாகாணங்களில் ரயில் சேவைகளை ரயில்வே துறை அதிகாரிகள் இடை நிறுத்தியுள்ளனர்.
பட்டானி நகரில் ரயில் தண்டவாளத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து ஒரு நாள் கழித்து இந்த இடை நிறுத்தம் நடந்துள்ளது.குண்டு வெடித்ததில் தண்டவாளம் மீது சென்ற ரயிலின் ஒரு பெட்டிசுக்குநூறாக சிதறியதில், ஒரு ரயில்வே ஊழியர் கொல்லப்பட்டார். மேலும், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.தாய்லாந்தின் இப்பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் வழக்கமான ஒன்று.இந்த பகுதிகளில் அரசியல் சுதந்திரம் வேண்டி திட்டமிட்டு ஒருங்கிணைந்து கிளர்ச்சியாளர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஜப்பானுக்கு கிடைத்தது மருத்துவம், உடலியலுக்கான நோபல் பரிசு !
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்த இணக்கம் - இந்தி...
பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டுக்கு முக்கிய...
|
|
|


