பயங்கரவாதி தாக்குதல் – பெல்ஜியத்தில் 3 பேர் பலி!

மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் தொழில் நகரமான லீஜில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு போலீசார் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
பெல்ஜியத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லீஜ் நகரில், நேற்று காலை, போலீசாரை, கத்தியால் தாக்கிய மர்ம மனிதன், அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறித்து, சுட்டதில், இரண்டு போலீசார் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, காரில் அமர்ந்திருந்த ஒருவரையும், அவன் சுட்டுக் கொன்றான்.
பின், அந்த மர்ம மனிதன், காரில் ஏறி, அருகில் இருந்த பள்ளிக்குள் நுழைந்தான்.தன்னை துரத்தி வந்த போலீசாரிடம் இருந்து தப்பிக்க, பள்ளியில் இருந்த, பெண் துப்புரவு பணியாளரை பிணைய கைதியாக பிடித்ததுடன், சரமாரியாக சுட்டதில், பலர் காயமடைந்தனர். இறுதியில், போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.
அவன், பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக, போலீசார் கூறினர்.
Related posts:
|
|