பயங்கரவாதிகளின் இலக்காகியுள்ள பிரித்தானியா!

Monday, August 1st, 2016

பிரித்தானியாவில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்வதற்கான அச்சுறுத்தல் காணப்படுவதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் பொலிஸ் துறைத் தலைவர் பெர்னார்டு ஹோகன் ஹெள இதனை தெரிவித்துள்ளார். இது குறித்த தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மக்களிடத்தில் காணப்படும் அச்ச உணர்வை எம்மால் முழுமையாக உணர முடிகின்றது.

பொலிஸார் என்ற வகையில் தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பது இயற்கையான ஒன்று.எனினும், தாக்குதல் சம்பவங்களை முழுமையாகத் தடுத்துவிட முடியும் என்று எம்மால் உறுதியாகத் தெரிவிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரித்தானியாவில் தீவிர பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் அது இப்போதும் தொடர்கின்றது.

இந்நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படுமா என்பதைவிட, எப்போது? எங்கு நடக்கும் என்பதுதான் தற்போதைய கேள்வியாக மாறியுள்ளது.பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து வர்தகர்கள், விளையாட்டு அரங்குகளின் அதிகாரிகள் ஆகியோருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் கடந்த வாரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தற்போதைய நிலையில் பிரித்தானியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவது தொடர்பாக 4 சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக உளவுத் தகவல் தெரிவிக்கின்றன.

அவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: