பயங்கரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் – இந்தியா!

Saturday, August 27th, 2016

பாகிஸ்தானுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என  இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு இரண்டாவது முறையாக விடுத்த அழைப்பையும் இந்தியா நிராகரித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் ஊடுருவும் பயங்கரவாதம் கவலையளிக்கும் வகையில் உள்ளது என இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பயங்கரவாதம்  குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதனிடையே, படையினரால் கொல்லப்பட்ட புர்ஹான் வானியை, “தியாகி’ என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் புகழாரம் சூட்டியதோடு, காஷ்மீர் பிரச்னை குறித்து அண்டை நாடுகளுக்கும், ஐ.நா. பாதுகாப்பு சபைக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். இதன் காரணமாக  இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவுடன், அந்நாட்டில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதமே காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பதற்றத்துக்கு மூலகாரணம் என்று இந்திய அரசு குற்றம்சாட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது..

Related posts: