பயங்கரவாதத்திற்கு எதிராகவும் உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்து!
Wednesday, October 13th, 2021
பருவநிலை மாற்றம் கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளமை போலவே பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆசிய வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் – அமைதி மற்றும் வளர்ச்சி தான் நம் பொதுவான கொள்கை என்றால், பயங்கரவாதம் என்ற மிகப் பெரிய எதரியை நாம் வெல்ல வேண்டும்.
ஒரு நாட்டிற்கு எதிராக மற்றொரு நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை அனுமதிக்கக் கூடாது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டுவது ஒரு நாட்டிற்கு அழகு அல்ல. அது பயங்கரவாதத்தின் மற்றொரு வடிவம்.
குறுகிய கால ஆதாயத்திற்காக பயங்கரவாதம், மதவாதம், வன்முறை, இனவெறி ஆகியவற்றை துாண்டுகின்றனர். அவை ஒருநாள் துாண்டியவரையே பதம் பார்த்து விடும்” எனவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


