சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள் – அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வலியுறுத்து!

Sunday, April 9th, 2023

சமாதானப் பேச்சுக்களில் ரஷ்ய நலன்கள் மற்றும் அக்கறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

அங்காராவில் நேற்று வெள்ளிக்கிழமை தனது துருக்கிய பிரதிநிதி மெவ்லூட் கவுசோக்லுவை சந்தித்த பிறகு அவர் இதைத் தெரிவித்துள்ளாளர்.

‘எந்தவொரு பேச்சுவார்த்தையும் ரஷ்ய நலன்கள், ரஷ்ய கவலைகளை கவனத்தில் எடுத்துக்கொள்வதன் அடிப்படையில் இருக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

‘இது புதிய உலக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளைப் பற்றியதாக இருக்க வேண்டும் எனவும் ரஷ்யா ஒரு மேலாதிக்கத்தின் தலைமையிலான ஒருமுனை உலக ஒழுங்கை நிராகரிக்கிறது எனவும் கூறினார்.

உலக அரங்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதாக ரஷ்யா நீண்ட காலமாக கூறியதுடன், உக்ரைன் தாக்குதல் அந்த போராட்டத்தின் ஒரு பகுதி என்று வாதிடுகிறது.

இந்த வார தொடக்கத்தில், ரஷ்யா, உக்ரைனில் ஒரு வருடத்திற்கும் மேலாக தாக்குதலைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியது, எந்த இராஜதந்திர தீர்வையும் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

000

Related posts: