பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Tuesday, May 7th, 2019
பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் புலோலோவின் தென்கிழக்கில் 33 கி.மீ தூரத்தில் கடலுக்கடியில் 127 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இப்பகுதியில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
மிகவும் ஆழமான பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
Related posts:
இஸ்ரேலுக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் !
எரிபொருள் தாங்கி வெடிப்பு: தன்சானியாவில் 35 பேர் பலி!
கொரோனா தொற்று: இந்தியாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது!
|
|
|


