பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!
Wednesday, January 16th, 2019
ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க் மாகாணத்தில் லெக் என்கிற மலைக் கிராமம் உள்ளது. பனிப்பிரதேசமான இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.
இந்த நிலையில் இங்கு ஏராளமானவர்கள் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தபோது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆந்திரா, தெலுங்கானாவில் வெப்பத்திற்கு 111 பேர் பலி!
27 ஆண்டுகளுக்குப் பின் ஈராக்கிற்கு நேரடி விமானம் !
இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க திட்டம் - பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜெனரல் பிபின...
|
|
|


