பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி கொலைக்கு சவுதி இளவரசரை யாரும் நேரடியாக குற்றச்சாட்டவில்லை -அமெரிக்க ஜனாதிபதி !
Sunday, June 30th, 2019
பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி கொலைக்கு சவுதி அரேபிய இளவரசரை யாரும் நேரடியாக குற்றச்சாட்டவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜப்பான், ஒசாகாவில் இடம்பெற்ற ஜி 20 மாநாட்டில், துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர்கள் ஜமால் கஷோகி மரணம் குறித்து சவுதி இளவரசர் முகமது சல்மானிடம் பேசினீர்களா? என்று கேள்வு எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில், ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட விடயத்தில் நான் மிகவும் கோபமாகவும், மகிழ்ச்சியற்றவனாகவும் இருக்கிறேன். இந்த இடத்தில் இது தொடர்பாக பேசுவதை நினைத்து நான் வருத்தம் கொள்கிறேன்.
ஆனால், ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி தலைவரை யாரும் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜமால் கஷோகியின் மரணம் குறித்த முக்கியமான ஆதாரம் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது.
அதில், இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்துக்குள் கொல்லப்பட்ட கஷோகி உடலை மறைப்பதற்காக சவுதி அதிகாரிகள் பேசிக்கொண்ட ஆடியோ வெளியிடப்பட்டது. அந்த உரையாடலில் பதிவானவர்களில் சவுதி இளவரசர் முகமது சல்மானு மூத்த ஆலோசகராக உள்ள மஹிரின் குரலும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


