இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரஷ்ய அமைச்சர் ஒருவர் கைது!

Tuesday, November 15th, 2016
இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் அலெக்செஃப் உல்யூகேவ் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

எண்ணெய் நிறுவன ஜாம்பவானான ரோஸ்னியாஃப்ட், மற்றொரு எண்ணெய் நிறுவனமான பஸ்னியாஃப்ட் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கும் விதமாக உல்யூகேவின் அமைச்சகம் சாதகமான மதிப்பீடு வழங்கியதில், அவர் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் லஞ்சம் பெற்றதாக ரஷ்யாவின் முக்கிய ஊழல் எதிர்ப்பு அமைப்பான ‘விசாரணைக்குழு’ தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட அமைச்சர் மீது இது தொடர்பான குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று விசாரணை குழுவின் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

_92444583_russia

Related posts: