பத்திரிகையாளர் ஜமால்கஷோகியை கொலை செய்தவர்களில் சிலர் அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்கள் – நியுயோர்க் டைம்ஸ்
Wednesday, June 23rd, 2021
அமெரிக்காவில் இராணுவபயிற்சி பெற்றவர்களே வோசிங்டன் டைம்ஸின் பத்திரிகையாளர் ஜமால்கஷோகியை கொலை செய்தனர் என நியுயோக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜமால்கஷோகியை 2018 இல் கொலை செய்த சவுதிஅரேபியாவை சேர்ந்தவர்களில் நால்வர் 2017 இல் அமெரிக்காவில் துணை இராணுவபடையினருக்கான பயிற்சியை பெற்றிருந்தனர் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் டையர் 1 என்ற குழுவினர் இந்த பயிற்சியை வழங்கினார்கள் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2014 இல் ஒபாமா காலத்தில் இராஜாங்க திணைக்களம் துணைஇராணுவத்தினரிற்கான பயிற்சிக்கான அனுமதியை வழங்கியது ஜனாதிபதி டிரம்பின் முதலாவது வருடத்தில் இந்த பயிற்சி தொடர்ந்தது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஆர்கன்சாவை சேர்ந்த நிறுவனமே இந்த பயிற்சியை வழங்கியது இந்த பயிற்சி தற்பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது சவுதி தலைவர்களை எப்படி பாதுகாப்பது என்ற பயிற்சி வழங்கப்பட்டது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
000
Related posts:
|
|
|


