பதிலடி கொடுக்க நினைத்தால் நீதியான நடவடிக்கை எடுக்கப்படும் – வடகொரியா
Tuesday, August 1st, 2017
வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தாலோ அல்லது இராணுவ நடவடிக்கைகள் மூலம் பதிலடி கொடுக்க முயற்சித்தாலோ அதற்கு ஒப்பான சரியானதும் நீதியுமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரியா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவால் வடகொரியா மீது விதிக்கப்படும் தடைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த ஏவுகணைச் சோதனையை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனத் தெரிவித்தது.
இதே வேளை, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வடகொரியா தெரிவிக்கவில்லை.
வடகொரியா மீது அமெரிக்கா அண்மையில் புதிய தடைகளை விதித்ததைத் தொடர்ந்தே குறித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனையை வடகொரியா முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


