பணவீக்கத்தால் தள்ளாடும் தென் சூடான்!

Saturday, November 26th, 2016

 

தெற்கு சூடான் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாடற்று, சுமார் 800 சதவிகிதம் அதிகரித்திருப்பதால், பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது.தெற்கு சூடான் எண்ணெய் ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ளது.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு நடைபெற்று வரும் சண்டை காரணமாக உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.மேலும், உலக அளவில் குறைந்த எண்ணெய் விலையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சூடானில் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் அதாவது நாட்டின் ஏறக்குறைய சரிபாதி ஜனத்தொகை போதுமான உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

3 (1)

Related posts: