ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்களை 200 ரஷிய ரய்ஷியகர்கள் எப்படி தாக்க முடியும்? – புடின்

Saturday, June 18th, 2016

ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்களை 200 ரய்ஷிய ரசிகர்கள் எப்படி தாக்க முடியும் என்று ரஷிய அதிபர் புதின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை மார்சைலில் இங்கிலாந்து- ரஷியா அணிகள் மோதின. அந்த போட்டியைக்காண இரண்டு நாட்டு ரசிகர்களும் அதிக அளவில குவிந்தனர்.

போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வெளியே இரு நாட்டு ரசிகர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் பலர் காயம் அடைந்தனர். போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி மோதலை தடுத்தனர். பின்னர் மைதானத்திற்குள்ளும் போட்டி முடிந்த பின்னர் சண்டையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பிரான்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று ரஷிய ரசிகர்களுக்கு இரண்டு ஆண்டு தண்டனைகள் விதித்துள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்டோரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இருக்கிறது.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்களை 200 ரஷிய ரசிகர்கள் எப்படி தாக்க முடியும் என்று ரஷிய அதிபர் புதின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இதுகுறித்து புதின் பேசுகையில் ‘‘இரு நாட்டு ரசிகர்களிடையே நடைபெற்ற மோதல் விளையாட்டுக்கு அவமானம். ஆனால், ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்களை 200 ரஷிய ரசிகர்கள் எப்படி அடிக்க முடியும் என்பதை உண்மையாகவே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை, இதில் பிரான்ஸ் சட்ட நடவடிக்கை எடுத்தால் அனைத்து ரசிகர்களுக்கும் ஒரே மாதிரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளையாட்டை அதிகமாக நேசிக்கும் நிதான எண்ணம் கொண்ட மக்களின் எந்தவொரு வன்முறையும் அவர்களுடைய அணியை வெற்றி பெற செய்யாது. அது அவர்களின் அணிக்கும், விளையாட்டிற்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்றார்.

Related posts: