பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்!

Friday, November 25th, 2016

பணப்புழக்கமே இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே அனைத்து பணப் பரிவர்தனைகளையும் செய்யும் வகையில், டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு ஸ்வீடன் சாதனை படைக்கவுள்ளது.

தற்போது, ஸ்வீடன் நாட்டில் 80 சதவீத பணப் பரிவர்தனை இணையத்தளம் மூலமாகவும், செல்போன் app கள் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன.

ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் பண அட்டைகள் மூலமாக பணத்தை செலுத்தும் முறையினால், 2009 ஆம் ஆண்டு முதல் பண நோட்டு மற்றும் நாணயங்களின் உற்பத்தி 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுவிட்டது.

இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தி, 2019 ஆம் ஆண்டு டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு, முற்றிலும் பண தாள்களே இல்லாத நாடாக ஸ்வீடனை மாற்ற திட்டம் இருப்பதாக அந்நாட்டு தேசிய வங்கியின் துணை ஆளுநர் செசிலியா ஸ்கிங்ஸ்லேயோவா தெரிவித்துள்ளார்.இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், 1660 ஆம் ஆண்டு உலகிலேயே முதல் முறையாக காகிதத்தால் ஆன பண நோட்டுகளை அறிமுகப்படுத்தியதே ஸ்வீடனின் ரிக்ஸ் வங்கிதான்.

sweden

Related posts: