படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை ஜாக் ஹமேலுக்கு மரியாதை செய்ய கூட்டம்!

Wednesday, September 14th, 2016

கடந்த ஜூலை மாதத்தில், பிரான்ஸ் நகரமான ருவானுக்கு அருகில் உள்ள தனது தேவாலயத்தில், இரண்டு இஸ்லாமியவாதிகளால் கொலை செய்யப்பட்ட ஷாக் ஹமேல் என்ற வயது முதிர்ந்த பாதிரியாருக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை போப் பிரான்சிஸ் நடத்தினர்.

வத்திக்கானில் நடந்த அந்த கூட்டத்தில் பங்கேற்ற அருட்தந்தை ஹமேலின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போப் பேசுகையில் ஜாக் ஹமேல் ஒரு கிறிஸ்துவ தியாகி என்று குறிப்பிட்டார். போப் பிரான்சிஸ் கடவுளின் பெயரில் கொலை செய்வது சாத்தான்களின் வேலை என்று கூறினார்.

பிறகு, செய்தியாளர்கள் போப் தெரிவித்த கருத்துக்களை விளக்கிக் கூறுமாறும்,குறிப்பாக இஸ்லாமியவாதிகளால் கொலை செய்யப்பட்ட அருட்தந்தை ஹமேலை கொலை செய்தவர்களை சாத்தான்கள் என்று கருதுகிறாரா என்று கேட்டனர். பதிலளித்த ருவானின் பிஷப் டொமினிக் லேபிரன், அந்த இரண்டு கொலையாளிகள் சாத்தானின் தாக்கம் இருந்ததை அவர்களே ஒப்புக்கொண்டார்கள் என்று தெரிவித்தார்.

ஷாக் ஹமேல் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

_91190081_oneone

Related posts: