படகு மூழ்கியதில் 107 பேர் பலி

லிபியாவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் படகு ஒன்று மூழ்கியதில் 107 அகதிகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் 40 பெண்களும் ஐந்து சிறார்களும் உள்ளடங்குகின்றனர். ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலியான அனைவரின் சடலங்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக லிபியாவின் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இந்த வருடத்தில் மாத்திரம் மத்தியத் தரைக்கடலில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமானவர்கள் அகதிகளாக சென்ற நிலையில் படகு விபத்தில் பலியானதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
Related posts:
பதின்ம வயது தற்கொலை குண்டுதாரி ஈராக்கில் கைது!
காட்டுத்தீயால் இந்தோனீசியாவில் அவசரநிலை பிரகடனம்!
28 ஆவது COP உச்சி மாநாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருமா – எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமானது ஐ...
|
|