காட்டுத்தீயால் இந்தோனீசியாவில் அவசரநிலை பிரகடனம்!

Friday, August 26th, 2016

சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்பட தென் கிழக்கு ஆசியாவில் முழுவதும் புகை மண்டலத்தை உருவாக்கியிருக்கும் காட்டுத்தீ பரவி வருவதால், இந்தோனீசிய ஆட்சியாளர்கள் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளனர்.

களைகளை வெட்டி குறைப்பது மற்றும் சுட்டெரிப்பது என்ற வழிமுறையை பயன்படுத்தி நிலத்தை சுத்தம் செய்ய நினைக்கும் விவசாய நிறுவனங்களாலும், உள்ளூர் விவசயிகளாலும் தான் வேண்டுமேன்றே இந்தோனீஷியாவில் பல தீவிபத்துகள் ஏற்படுகின்றன

தீ விபத்தும், அதனால் உருவாகும் புகை மூட்டமும் ஆண்டுதோறும் நிகழும் பிரச்சனையாகிவிட்டது. நிலத்தில் சுட்டெரிப்பதை தடுக்கும் உயரிய முயற்சியாக இந்த ஆண்டு மட்டுமே 450 பேரை இந்தோனீசிய காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

160321105933_forest_fire_sri_lanka_512x288_bbc_nocredit

160502055702_uttarakhand_forest_fire_640x360_rajugusain_nocredit

Related posts: