ஜப்பான் பிரதமரை மிரட்டிய டிரம்ப்!

Monday, June 18th, 2018

”அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள மெக்சிகோ நாட்டினரை ஜப்பானுக்கு அனுப்பி விடுவேன்” என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

வட அமெரிக்க நாடான கனடாவில் சமீபத்தில் கனடா அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் இத்தாலி ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளடக்கிய ‘ஜி – 7’ உச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜி – 7 மாநாட்டில் வழங்கப்பட்ட கூட்டறிக்கைக்கான ஆதரவை திரும்ப பெற்றார். மேலும் ட்ரூடோவையும் கடுமையாக விமர்சித்தார்.இதற்கு மற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை அதிபர் டிரம்ப் வம்புக்கு இழுத்துள்ளார்.

வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் கூறியதாவதுபிறநாட்டு மக்கள் குடியேறுவதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும் பிரச்னையை சந்தித்து வருகின்றன. இதை உணராத ஜப்பான் போன்ற நாடுகள் அகதிகளாக வரும் மக்களை ஏற்க வேண்டும் என எங்களுக்கு அறிவுரை கூறுகின்றன.

இது எவ்வளவு பெரிய சுமையை ஏற்படுத்தும் என அந்நாடுகள் உணர மறுக்கின்றன. அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள 2.5 கோடி மெக்சிகோ அகதிகளை ஜப்பானுக்கு அனுப்புகிறோம்.

இதை ஜப்பான் எப்படி சமாளிக்கிறது என பார்க்கலாம். அந்த சூழ்நிலையில் ஷின்சோ அபே பதவியை துறந்து விடுவார். அறையில் இருந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Related posts: