படகு கவிழ்ந்து விபத்து : 11 பேர் பலி!
Friday, July 20th, 2018
அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் 11 பேர் பலியாகினர்.
டேபிள் ரொக் ஏரியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மோசமான காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் 30 பேர் வரையில் பயணித்துள்ளனர். இதில் 11 பேர் பலியாகியுள்ளதுடன் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் 7 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
தாயின் அழுகைக்க மதிப்பளித்து போட்டியை நிறுத்திய நடால்!
ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனை!
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - விளாடிமிர் புதின்!
|
|
|


