உலககை கண் கலங்க வைத்த மற்றுமொரு புகைப்படம் !

Monday, October 10th, 2016

ஆபிரிக்க நாடுகள் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிகளவான மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

இவ்வாறு ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்ளும் போது அது அவர்களின் வாழ்வின் இறுதி முடிவாக கூட அமைந்து விடுகின்றது.இந்நிலையில், ஆபத்தான கடல் பயணங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அகதிகளின் வருகையினை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.

இவ்வாறான நிலையில், அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றிவந்த படகு ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து 1800 பேரை நேற்று பாதுகாப்பாக மீட்டுள்ளதாக இத்தாலிய கடலோர பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இதன் போது கைக்குழந்தை ஒன்று கடலில் இருந்து மீட்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தளங்களில் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகின்றது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆபத்தான கடல் பயணங்கள் மூலம் சுமார் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த ஆண்டு அலன் குர்தி என்னும் சிறுவன் இவ்வாறு உயிரிழந்தமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: