இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு !

Tuesday, August 11th, 2020

இந்தோனேசியாவில் மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக வெடித்த எரிமலையிலிருந்து, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வானில் சாம்பலை கக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள சினாபுங் மலையின் ஒரு வருடத்திற்கும் மேலாக வெடிக்காமல் இருந்த எரிமலை கடந்த மூன்று நாட்களில் இரண்டு முறை வெடித்த்துள்ளது.

அந்த பகுதியில் குடியிருக்கின்ற மக்கள் அவர்களது செல்போனில் எரிமலை வெடித்து சிதறும் காட்சிகளை பதிவு செய்துள்ளனர்.

அதில் சுமார் 8071 அடி உயரம் கொண்ட சினாபுங் மலையின் உச்சியிலிருந்து தடிமனான சாம்பல்கள் வானை நோக்கி எழுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலை வெடித்த சத்தம் இடி போல இருந்தது. 30 நொடிகளுக்கும் குறைவாக தான் இந்த  வெடிப்பு நீடித்தது என்று அதனை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related posts: