நைஜீரியாவில் கலவரம் : 86 பேர் படுகொலை!
Wednesday, June 27th, 2018
நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.
இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர்.அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன.
கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மக்களை அமைதி காக்கும்படி அந்நாட்டு அதிபர் முகமது புஹரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நைஜீரியாவில் நிலப் பிரச்னை தொடர்பாக பல்வேறு பிரிவினருக்கு இடையே மோதல்கள் நடப்பது வழக்கம். 2009ல் இது போன்று நடந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.
Related posts:
எகிப்தின் லக்ஸர் நகரில் வெப்பக் காற்று: பலூன்கள் இயக்கத்தடை விதிப்பு!
மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரினை வென்றது நியூசிலாந்து அணி!
அமெரிக்கா செல்ல விரும்பும் ரஷ்ய ஜனாதிபதி!
|
|
|


