நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து : 7 பேர் பலி!
Tuesday, August 9th, 2016
நேபாளத்தில் காட்டுப்பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 7 பேரும் பலியாகியுள்ளனர்.
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவத்தின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே, தாயும், குழந்தையும் கோர்க்காவில் இருந்து இன்று பிற்பகல் ஒரு தனியார் ஹெலிகொப்டர் மூலம் காத்மண்டுவில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
ஆனால், அந்த ஹெலிகொப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் பதின் தண்டா காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், ஹெலிகொப்டரில் பயணித்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகியுள்ளனர்.
Related posts:
பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் விமான விபத்தில் 75 பேர் உயிரிழப்பு!
அதிகாரிகள் தப்பியோட்டம் : சிறைச்சாலையில் 39 பேர் பலி!
நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைவு!.
|
|
|


