மீளவும் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் – ஒபாமா!

Wednesday, December 28th, 2016

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்று இருப்பேன் என ஒபாமா பேட்டி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8ஆம் திகதி நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத அளவில் வெற்றி பெற்றார்.

அதிபர் ஒபாமாவின் ஜன நாயக கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அமெரிக்க அரசியல் சட்டப்படி ஒருவர் தனது வாழ்நாளில் 2 தடவைக்கு மேல் அதிபர் பதவி வகிக்க முடியாது.

எனவே, தற்போதைய அதிபர் ஒபாமா இனி தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும் அவரது பதவிக்காலம் இன்னும் 3 வாரங்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் சி.என்.என். மற்றும் சிகாகோ பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒபாமா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்க மக்கள் இன்னும் எனது திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இருந்த போதிலும் டிரம்புக்கு மக்கள் வாக்களித்து விட்டனர். எனது திட்டங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. தேர்தலில் மீண்டும் நான் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருந்திருந்தால் நான் வெற்றி பெற்று டிரம்பை தோற்கடித்து இருப்பேன்.

ஏனெனில் மெஜாரிட்டி அமெரிக்கர்கள் எனது திட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஹிலாரி கிளிண்டன் மிகவும் எச்சரிக்கையுடன் தான் பிரசாரம் மேற்கொண்டார். எனவே வெற்றி நிச்சயம் என உறுதி செய்யப்பட்டிருந்தது என்றார்.

ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்திருப்பதன் மூலம் எனது 8 ஆண்டு கால ஆட்சி ஒதுக்கப்பட்டதாக கருத முடியாது என்றார்.

இதுகுறித்து புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு எதிராக போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என ஒபாமா கூறலாம். ஆனால் அதற்கு வழியே இல்லை.

ஒபாமாவிடம் டேவிட் அக்சல்ராட் பேட்டி கண்டார். இவர் ஒபாமாவின் முன்னாள் மூத்த ஆலோசகராக இருந்தார். ஒபாமாவின் நீண்ட கால நண்பராவார். சி.என்.என். செய்தி நிறுவனத்தில் செய்தி ஆய்வாளராக உள்ளார். இவர் ஒபாமாவிடம் பல பேட்டிகளை எடுத்துள்ளார்” எனவும் தெரிவித்துள்ளார்.

06-6-66

Related posts: