நேபாளத்தில் நில அதிர்வு!

நேபாளத்தில் இன்று(08) காலை 8.21 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது 5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இதேபோல கடந்த 2015 ஆம் ஆண்டும் நேபாள நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதில் 9 ஆயிரம் மக்கள் பலியாகினார்கள் என்பதும் 22ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கம் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில்உணரப்பட்டதாக தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
Related posts:
சர்வதேச விமானங்களை நிறுத்தியது ஈராக்!
நெதர்லாந்து தாக்குதல் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு - பிரதான சந்தேக நபர் கைது!
24 மணிநேரத்தில் 300 இற்கும் அதிகமானோர் பலி - ஆப்கானிஸ்தானில் வேட்டையாடப்படும் தலிபானியர்கள்!
|
|