நேபாளத்தில் இடம்பெற்ற விபத்தில் 17 போ் பலி – பலரது உடல்நிலை கவலைக்கிடம்!

Thursday, December 15th, 2022

நேபாளத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 17 போ் உயிரிழந்துள்ளதாகவும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறியதாவது:

தலைநகா் காத்மாண்டுக்கு 48 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேதான்சௌக் கிராமம் வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளானது.

மத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஏராளமானவா்கள் அந்தப் பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் 17 போ் உயிரிழந்துள்ளனா். ஏராளமானவா்கள் காயமடைந்தனா். அவா்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என்று பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

மோசமான வீதிகளைக் கொண்டுள்ள நேபாளத்தில் வீதி விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: