கொரோனாவை போன்று டெங்கு நோயையும் இல்லாதொழிக்க விஷேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – சுகாதார அமைச்சர் உறுதி!

Tuesday, October 20th, 2020

கொரோனாவைப் போன்று டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படு ஏன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் –

கொரோனா நிலைமையை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளைப் போன்று மனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ள டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தவும் திட்டமொன்று செயல்படுத்தப்படுகின்றது.

கொரோனா காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகளவு உயிரிழப்புகள் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்டுள்ளன. இவ்வருடம் 34 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் இது கொரோனாவை விட மோசமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எமது சுற்றாடலை சுத்தம் செய்து அரசு மேற்கொள்ளும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டுப் பகுதியில் இலங்கை பூராவும் 4311 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதோடு கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவு நோயாளர்கள் காணப்பட்டார்கள்.

கண்டி மாவட்டத்தில் 715 டெங்கு நோயாளிகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 668 டெங்கு நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டார்கள். இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலேயே அதிகளவு அதாவது 169 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ் மாவட்டத்தில் அரிசி வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்படும் - கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை ...
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் உல்லாசப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது கட்டுநாயக்க விமான நி...
அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்கள் - பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளவத...