நீர்யானை கடித்து சுற்றுலா பயணி உயிரிழப்பு!

Thursday, August 16th, 2018

கென்யாவில் சுற்றுலா பயணியொருவரை நீர்யானையொன்று கடித்து கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கென்யாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கென்யாவின் தலைநகர் நைரோபி அருகே நைவாசா என்ற ஏரியில் நீர்யானைகள் சரணாலயம் உள்ளது. இது மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

தாய்வானை சேர்ந்த சுற்றுலா பயணி சங் மிங் சாங் (66) என்பவர் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப்பார்ப்பதற்காக அங்கு சென்றிருந்தார்.

பின்னர் மலையின் உயரமான இடத்தில் இருந்து நீர் யானைகளை புகைப்படம் எடுத்துள்ளார். இதன்போது கால் தவறி நீர்யானைகள் இருந்த குளத்துக்குள் அவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது , அங்கிருந்த நீர்யானையொன்று அவரை கடித்து குதறியுள்ளது.

பின்னர் உடனடியாக செயற்பட்ட பாதுகாவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதும் , பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் மார்பு பகுதியில் கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 6 பேர் நீர்யானைகளால் கடித்து கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: