நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா!

Tuesday, January 21st, 2020

இந்தியாவின் ஆந்திர பிரதேச கடற்பரப்பில் கே.எஃப் நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பலை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

குறித்த ஏவுகணையானது 3500 கிலோமீற்றர் தூரத்தை தாக்கும் திறன் கொண்டதென இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் ஊடாக மேற்படி ஏவுகனை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப திறன் கொண்ட இரண்டு நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பல்களில் இதுவும் ஒன்றாகும்.

Related posts: