நீண்டகாலம் சிறையிலுள்ள இலங்கையரின் விடுதலை குறித்து பரிசீலிக்க இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு!

35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை மறுத்ததற்கு எதிரான மனுவிசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மீது மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்கூட்டிய விடுதலைக்குப் பிறகு, தாம் சொந்த நாட்டிற்குத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, உள்துறை அமைச்சு மூலம் இந்திய அரசாங்கத்திடம் குறித்த இலங்கையரர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அபராத தொகையை செலுத்த முடியாது சிறையிலுள்ள கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடி...
இணைய வசதியை இலங்கைக்கு கொண்டுவந்த மகிந்த ராஜபக்சவை ” மைனா ” என்கிறார்கள் – நாமல் ஆதங்கம்!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி...
|
|