நிராயுதபாணியான கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க காவல்துறை தகவல்!

அமெரிக்காவின் துல்சா நகரில் , வெள்ளிக்கிழமை சுட்டு கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் ஆயுதம் ஏதையும் வைத்திருக்கவில்லை என்று அந்நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டெரன்ஸ் க்ரட்சர் என்பவர் மின் அதிர்ச்சி தரும் டேசர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்னால் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி இருந்தார். பின்னர் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதை வெளியாகி இருக்கும் காணொளி பதிவு காட்டுகிறது.
காரை நிறுத்திய பிறகு கட்டளைகளை பின்பற்ற அவர் மறுத்துவிட்டார் என்று காவல் துறையினர் தெரிவித்திருக்கிறனர். இந்த காணொளி பதிவு மிகவும் கவலை அளிக்கிறது என்று தெரிவித்திருக்கும் துல்சா நகர காவல் துறை தலைவர் சூக் ஜோர்டான், இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.
இனவெறி பாரபட்சம் தொடர்பான கேள்விகளை ஏழுப்பியிருக்கும், ஆயுதம் வைத்திருக்காத கறுப்பினத்தவர் அமெரிக்க காவல் துறையினரால் சுட்டு கொல்லப்படும் தொடர் சம்பவங்களில் இது மிகவும் சமீபத்திய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|