நியூயோர்க் நகரில் கனமழை – பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிப்பு!

அமெரிக்கா நியூயோர்க் நகரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வெள்ளப் பெருக்கு காரணமாக சாலைப் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகரப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் நகர ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அவசர நிலையை அறிவித்துள்ளார்.
நியூயார்க் நகரம் முழுவதுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, 2021ல் புயலின் போது ஏற்பட்ட கடும் மழைக்காரணமாக மழையால் நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் கனெக்டிகட் பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இன்று நள்ளிரவு அமுலுக்குவரும் தடை - மீறினால் நடவடிக்கை!
சகல பிரஜைகளுக்குமான டிஜிற்றல் பணப்பை மென்பொருள் – நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவி...
தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது - யுனிசெஃப் தெரிவி...
|
|