நியூசிலாந்தில் பாரியளவில் நில அதிர்வு!

நியூசிலாந்தின் தீவு ஒன்றில் பாரியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடலில் Kermadec தீவுகள் பகுதியில் 7.4 மெக்னடியுட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் சிவில் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் கடற்கரை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வழமையை விடவும் வலுவான மற்றும் ஆபத்தான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்பார்க்க முடியாத வகையில் பாதிப்புகள் ஏற்படலாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் நியூசிலாந்தை இன்னும் சுனாமி தாக்கவில்லை எனவும், 2 மணித்தியாலங்களுக்கு பின்னர் சுனாமி தாக்கும் அறிகுறிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து இதுவரையில் எவ்வித தகவல்களும் இன்னமும் வெளியாகவில்லை.
எப்படியிருப்பினும் சுனாமிக்கான ஆபத்து இல்லை எனவும் 8 நிமிடங்களின் பின்னர் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாகவும் சில நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Related posts:
|
|