ஈரான் திடீர் ஏவுகணை சோதனை: உலக நாடுகள் அதிர்ச்சி

Wednesday, March 9th, 2016

ஈரான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடுத்தர ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த நாட்டின்மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இந்த தடையை பொருட்படுத்தாமல் ஈரான்  நேற்று (08) திடீரென கண்டம் விட்டு கண்டம் பாயும் பேலிஸ்டிக் ரக ஏவுகணைகளை சோதித்து பார்த்தது.

இது தொடர்பாக ஈரான் செய்தி நிறுவனம் ஐ.எஸ்.என்.ஏ., வெளியிட்டுள்ள செய்தியில், பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனைகளை நடத்தி இருப்பது ராணுவ பயிற்சியின் ஒரு அங்கம் ஆகும். தாக்குதல்களை தடுக்கக்கூடிய ஈரானின் ஆற்றலை காட்டுவதற்கும், எந்த ஒரு நாட்டிடம் இருந்து ஈரானுக்கு வருகிற அச்சுறுத்தலை எதிர்கொள்கிற ஆற்றலை ஈரான் பெற்றிருப்பதை காட்டவும்தான் ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு மத்தியிலும் ஈரான், கண்டம் விட்டு கண்டம் பாய்கிற ஏவுகணைகளை சோதித்து பார்த்திருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

Related posts: