நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பு!
Wednesday, January 25th, 2023
கடந்த வாரம் ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார்.
தலைநகர் வெலிங்டனில், இளவரசர் சார்லஸின் பிரதிநிதியான அந்நாட்டு ஆளுநருக்கு முன்பாக கிறிஸ் ஹிப்கின்ஸ் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்.
இது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் மற்றும் பொறுப்பு என்றும் எதிர்வரும் சவால்களால் உற்சாகத்துடன் எதிர்கொள்வேன் என்றும் கிறிஸ் ஹிப்கின்ஸ் கூறியுள்ளார்.
44 வயதான அவர், ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழிலாளர் கட்சியின் ஆதரவு 2022 ஆண்டின் தொடக்கத்தில் 40 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக குறைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிறந்த நாள் வாழ்த்துக்கு பிடல் காஸ்ட்ரோ நன்றி!
கிருஸ்தவ தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; நைஜீரியாவில் 16 பலி!
சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது - போரை நிறுத்த உக்ரைனும், ஐரோப்பாவும் தயாராக இல்லை - ரஷ்...
|
|
|


