நியுஸிலாந்தை தாக்கியது சுனாமி: 2 பேர் பலி!

நியுஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியது.
கடுமையான நில நடுக்கத்தை அடுத்து இரண்டு பேர் உயிரிழந்தனர். கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று பிரதமர் ஜான் கே தெரிவித்துள்ளார்
Related posts:
பிரான்ஸ் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்
கியுசூ தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்!
1000 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ள நிதி ஒதுக்கீடு !
|
|